உரிமையைத்தான் கேட்கிறோம்; தனிச்சொத்தை அல்ல - மு.க. ஸ்டாலின்
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது என்ற மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு மத்திய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல!
"மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் எனப் பதிவிட்டுள்ளார்.
Rs. 2,152 crore fund for Tamil Nadu students - Chief Minister Stalin's allegation - தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடி நிதி - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
'தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக மத்திய அரசு அச்சுறுத்தி வருகிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்திற்கு எதிரான மத்திய அரசின் அணுகுமுறைக்கு எல்லையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தேசிய கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக அச்சுறுத்த துவங்கியதுடன், தமிழக மாணவர்களுக்கான ரூ.2,152 கோடியை பறித்து வேறு மாநிலங்களுக்கு கொடுத்துள்ளனர். இது உரிமைக்காக போராடும் நமது மாணவர்களுக்கான தண்டனையே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இந்திய வரலாற்றில், எந்த மத்திய அரசும், அரசியல் பழிவாங்கலுக்காக கல்வி வாய்ப்பை நெரிக்கும் அளவுக்கு கொடூரமாக இருந்தது இல்லை. தமிழகம் மற்றும் அதன் மக்கள் மீது அநீதி மற்றும் வெறுப்பின் முகமாக பா.ஜ., தன்னை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.