Schools reopen today after half-year vacation - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 02, 2025

Comments:0

Schools reopen today after half-year vacation

விளக்கம்

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று ( ஜன .2 ) திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு . விடுமுறை நீட்டிப்பு என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது



அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு Schools reopen today after half-year vacation

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண் டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று (ஜன.2) திறக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த டிச.9 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்பட்டன. டிச.24 முதல் நேற்று வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இதற்கிடையே கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் அரையாண்டு விடுப்புக்கு பின்னர் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இந்நிலையில் தொடர் விடுமுறைக்குபின் பள்ளிகள் இன்று (ஜன.2) திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை பாதித்த கடலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு மாவட்ட அளவில் ஜன.2 (இன்று) முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews