ஆசிரியர்கள் பயிற்சி முகாம் ஒத்தி வைக்க வலியுறுத்தல் Urge to postpone teachers' training camp
'பள்ளி மாணவர் களுக்கு, திருப்புதல் தேர்வு நடப்பதால், இன்று முதல், 23ம் தேதி வரை நடக்கும், அறிவியல் ஆசி ரியர்களுக்கான பணிப் பயிற்சி முகாமை ஒத்தி வைக்க வேண்டும்' என, பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்கு னருக்கு அந்தக் கழகம் அனுப்பியுள்ள கடிதம்:
பள்ளிகளில் ஜன., 27ம் தேதி வரை, மாண வர்களுக்கு முதல் திருப் புதல் தேர்வுகள் நடக் கின்றன. இந்நிலையில், இன்று முதல் 24ம் தேதி வரை, சென்னையில் உள்ள அறி வியல் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை சார்பில், 'இன்சர்வீஸ் டிரெ யினிங்' என்ற, பணிப் பயிற்சி முகாம் நடக்கிறது. இன்று மாணவர் களுக்கு கணித பாடத்திற்கும், 23ம் தேதி அறிவியல் பாடத்திற்கும் தேர்வுகள் நடக்கின்றன. பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களால், மாணவர் களின் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, தேர்வு நடக் கும் நாட்களில் பணிப்ப யிற்சி முகாம் நடத்துவதை விடுத்து, வேறு நாட்களில் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூற பப்பட்டுள்ளது.
Search This Blog
Monday, January 20, 2025
Comments:0
ஆசிரியர்கள் பயிற்சி முகாம் ஒத்தி வைக்க வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84666425
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.