மே 25-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: நாடு முழுவதும் நடைபெறுகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 23, 2025

Comments:0

மே 25-ம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: நாடு முழுவதும் நடைபெறுகிறது

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AF%E0%AF%81.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF.%20


சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு பட்டதாரிகள் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 979 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதையடுத்து முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்வெழுத விரும்பும் பட்டதாரிகள் https://upsc.gov.in/ எனும் வலைத்தளத்தில் பிப்ரவரி 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அவற்றை பிப்ரவரி 12 முதல் 18-ம் தேதி வரை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வுக்கான பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் உட்பட கூடுதல் தகவல்களை மேற்கண்ட வலைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம் என்று யுபிஎஸ்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

UPSC குடிமை பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு

ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட 979 குடிமைப் பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு

IAS , IFS , IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு IPS உள்ளிட்ட 23 பதவில் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது - யுபிஎஸ்சி

சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு வரும் பிப். 11 வரை விண்ணப்பிக்கலாம்.

979 காலிப் பணியிடங்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கும் விண்ணப்பிக்கவும் www.upsc.gov.in இணையதளத்தை பார்க்கலாம் - யூ.பி.எஸ்.சி.
UPSC-Civil-Services-Exam-Notification


சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதிகளை வெளியிட்டது யு.பி.எஸ்.சி.

UPSC Civil Services Exam Dates published

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேதிகளை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு வரும் மே 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கு இன்று முதல் வரும் பிப்ரவரி 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. .

ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற பல பணிகளுக்கான 979 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை 1056 பணியிடங்களை நிரப்ப சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், தற்போது நடத்தப்படவுள்ள தேர்வில் அதிலிருந்து 77 பணியிடங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவில் சர்வீஸ் முதல்நிலைத்தேர்வு நடைபெறும் அதே நாளில் இந்திய வன சேவைக்கான (Indian Forest Service) தேர்வும் நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

150 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84603068