Tamil Nadu government orders to fill 8,997 vacant posts of cooking assistants on fixed salary! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 19, 2024

Comments:0

Tamil Nadu government orders to fill 8,997 vacant posts of cooking assistants on fixed salary!

Tamil%20Nadu%20government%20orders%20to%20fill%208,997%20vacant%20posts%20of%20cooking%20assistants%20on%20fixed%20salary!


தொகுப்பூதியத்தில் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

₹3,000/- தொகுப்பூதியத்தில் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் கலவை சாதத்துடன், மசாலா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது என்றும், துவக்கப்பட்ட இத்திட்டம் அனைத்து மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், 1995-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு 60:40 பங்களிப்பு முறையில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது என்றும், இத்திட்ட செயலாக்கத்திற்கென, சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு ஒரு ஆண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் ரூ.1000/- ல், ஒன்றிய அரசின் பங்காக ரூ.600/- வீதம் ஒன்றிய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 43131 சத்துணவு மையங்களில், ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சத்துணவுப் பணியாளர்கள் கீழ்க்கண்டவாறு சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர் என்றும் சமூக நல ஆணையர் தெரிவித்துள்ளார்:- 2. சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட உரிய ஆணை வழங்குமாறு சமூக நல ஆணையர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

3. சமூக நல ஆணையரின் கருத்துரு, அரசளவில் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட்டது. அதனடிப்படையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் தொய்வின்றி, நன்முறையில் செயல்பட இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலியாகவுள்ள பணியிடங்களுள், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் ரூ.3000/- என்ற தொகுப்பூதிய அடிப்படையில் நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான நான்கு மாதங்களுக்கான தொகை ரூ.10,79,64,000/- (ரூபாய் பத்து கோடியே, எழுபத்தொன்பது இலட்சத்து, அறுபத்து நான்காயிரம் மட்டும்) ஒப்பளிப்பு செய்தும், பின்வருமாறு ஆணைகள் வெளியிடலாம் என முடிவு செய்து, அவ்வாறே அரசு ஆணையிடுகிறது:-

1. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள மொத்த பணியிடங்களில், 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3,000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பிட அனுமதி வழங்கப்படுகிறது. தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் - பணியாளர்களுள், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் (சிறப்பு கால முறை ஊதிய ((STS) நிலை-1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதிய சமையல் உதவியாளர் பணி நியமனத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி என நிர்ணயம் செய்யப்படுகிறது. உதவியாளர்களை சென்னை மாவட்டத்தில் சமையல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட, இணை இயக்குநர் (கூஉதி) நியமன அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைத் தவிர, அரசாணை(நிலை) எண்:163, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந 4-2) துறை, நாள் 18.08.2010 மற்றும் அரசாணை (நிலை) எண்.28, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந4-2) துறை நாள் 05.09.2020 ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள இதர பணிநியமன நடைமுறைகளைப் பின்பற்றி சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்பிட வேண்டும். மேலும், அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில், அரசாணை (நிலை) எண்.4, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (சந4-2) துறை, நாள் 06.10.2020-ல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பணி நியமனம் செய்திட வேண்டும். சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ், சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்படுவதால் ஆண்டிற்கு தோராயமாக அரசிற்கு ஏ ஏற்படும் (ரூபாய் இருபத்து ஆறு கோடியே தொண்ணூற்று ஒன்பது இலட்சத்து பத்தாயிரம் மட்டும்) பின்வரும் கணக்குத் தலைப்பின் கீழ் ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.

செலவினம் ரூ.26 " 2236 - சத்துணவு 02 - சமூக நலன் 102 - மதிய உணவு - மாநிலச் செலவினங்கள் KL 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் 333 தொழில்முறை, சிறப்புப் பணிகளுக்குத் தொகை கொடுத்தல் - 04 ஒப்பந்த ஊதியம்" (த.தொ.கு. 2236 02 102 KL 333 04) 4. மேலே பத்தி 3-இல் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ள தொகையில் 2024-2025 நிதியாண்டிற்கு தேவையான கூடுதல் தொகை ரூ.10,79,64,000/- 2024-2025-ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடு/இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். எனினும் 2024-2025-ஆம் ஆண்டிற்கான துணை மானியக் கோரிக்கையில் ஒரு சிறப்பு நிகழ்வாகக் கொணர்ந்து, குறிப்பிட்ட தொகையினை சேர்ப்பதன் மூலம் இச்செலவினம் பேரவையின் பார்வைக்கு கொண்டு செல்லப்படவேண்டும். அவ்வாறு நிதியொதுக்கம் செய்ய இருப்பதை எதிர்நோக்கி, மேலே பத்தி 3-இல் அனுமதிக்கப்பட்ட தொகையினை பெற்று வழங்கிட சமூக நல ஆணையர் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான துணை மதிப்பீடுகளில் இத்தொகையை சேர்ப்பதற்கு உரிய வரைவு விளக்கக் குறிப்பினையும் மற்றும் திருத்த மதிப்பீடு/இறுதி திருத்த நிதியொதுக்கத்தில் சேர்ப்பதற்கு உரிய கருத்துருவையும் தவறாது நிதித் (ச.ந./வ.செ.பொ-1) துறைக்கு உரிய நேரத்தில் அனுப்பிவைக்குமாறு சமூக நல ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்

5. இவ்வாணை நிதித்துறையின் அ.சா.எண். 5413721/நிதி (சந)/ 2024, நாள் 08.12.2024-ல் பெறப்பட்ட ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. இதற்கான கூடுதல் நிதியொதுக்கப் பேரேடு எண்.1633 (ஆயிரத்து அறுநூற்று முப்பத்து மூன்று) (IFHRMS ASL NO: 2024121633).

CLICK HERE TO DOWNLOAD GO.Ms.No.95, dated 16.12.2024- filing up of vacancy Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84599834