NCHM - JEE - என்.சி.எச்.எம்., ஜே.இ.இ.,-2025 நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 15, 2025 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 27, 2024

Comments:0

NCHM - JEE - என்.சி.எச்.எம்., ஜே.இ.இ.,-2025 நுழைவுத் தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 15, 2025



என்.சி.எச்.எம்., ஜே.இ.இ.,-2025

நாட்டில் உள்ள 'இன்ஸ்டிடியூட்ஸ் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்' கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப்படிப்புகளில், 2025-26ம் கல்வி ஆண்டில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேர்வு, 'நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் ஜாயிண்ட் எண்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் - என்.சி.எச்.எம்., ஜே.இ.இ.,-2025'.

அறிமுகம்

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் கடந்த 1982ம் ஆண்டு 'நேஷனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜி' எனும் அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் ஹோட்டல் மேலாண்மை சார்ந்த படிப்புகளுக்கு உரிய அனுமதியை வழங்குகிறது. அதன்படி, இதுவரை 21 மத்திய ஹோட்டல் மேலேண்மை கல்வி நிறுவனங்களுக்கும், 30 மாநில அரசு ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கும், ஒரு பொதுத்துறை கல்வி நிறுவனத்திற்கும், 24 தனியார் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களுக்கும், 2 பொது தனியார் ஒப்பந்தப்படி செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கியுள்ளது.

படிப்பு:

தேசிய தேர்வு முகமை நடத்தும் என்.சி.எச்.எம்., ஜே.இ.இ.,-2025 வாயிலாக 3 ஆண்டுகள் கொண்ட பி.எஸ்சி.,-ஹாஸ்பிட்டாலிட்டி அண்டு ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் படிப்பில் சேர்க்கை பெறலாம்.

தகுதிகள்:

12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். தற்போது 12ம் வகுப்பு படித்திருக்கும் மாணவ, மாணவிகளும் இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை:

கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் என்.சி.எச்.எம்., ஜே.இ.இ.,-2025 தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் பிடித்தம் செய்யப்படுகிறது. கேள்விகள் அனைத்தும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேட்கப்படுகிறது. தேர்வு மையங்கள்:

நாட்டின் அனைத்து முக்கிய நகரங்கள் உட்பட மொத்தம் 109 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை:

https://nchm2025.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

பிப்ரவரி 15, 2025

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்:

ஏப்ரல் 27, 2025

விபரங்களுக்கு:

https://exams.nta.ac.in/NCHM/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews