பள்ளிக்காக மொபைல் செயலி உருவாக்கும்போது ஆசிரியர்களின் வேலைப்பளு பாதியாக குறையும்
''பள்ளிக்காக மொபைல் செயலிகள் உருவாக்கம் அதிகரிக்கும்-போது, ஆசிரியர்களின் வேலை எளிதாகும், வேலைப்பளு பாதி-யாக குறையும்,'' என, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் பேசினார்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், பள்ளி நிர்வாகம், கற்றல் மற்றும் கற்பித்தலில் உதவக்கூடிய மொபைல் செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்து, பயிற்சி முகாமை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
பிரச்னைகள், இடர்பாடுகள், சவால்கள் உருவாகும்போது அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் பிறக்கின்றன. இக்கால-கட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் கோலோச்சி வருகிறது. பள்ளி நிர்வாகம், கற்பித்தல் செயல்பா-டுகள், பாடக்கருத்துக்களை தெரிந்துகொள்ளுதல், புரிந்துகொள்-ளுதல், வாசித்தல் போன்ற கற்றல் நடவடிக்கைகளில் எழும் சவால்களுக்கு தீர்வு காண்பது அவசியம். பள்ளியில் உருவாகும் சிக்கல்களுக்கு, எளிதாக தீர்வு காண, 'மொபைல் செயலி'களை உருவாக்கும்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெரிய அளவில் பயன்பெறுவர். பள்ளிக்காக மொபைல் செயலிகள் உரு-வாக்கம் அதிகரிக்கும்போது, ஆசிரியர்களின் வேலை எளிதாகும், வேலைப்பளு பாதியாக குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் மாவட்டம், பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலை-மையாசிரியர் அருளானந்தம், கருத்தாளராக செயல்பட்டார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் அமீருன்னிசா, நாமக்கல், சேலம், விருதுநகர் மாவட்-டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Search This Blog
Saturday, December 28, 2024
Comments:0
Home
apps
teachers news
பள்ளிக்காக மொபைல் செயலி உருவாக்கும்போது ஆசிரியர்களின் வேலைப்பளு பாதியாக குறையும்
பள்ளிக்காக மொபைல் செயலி உருவாக்கும்போது ஆசிரியர்களின் வேலைப்பளு பாதியாக குறையும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.