America-ல் உயர்கல்வி பயில்வதற்காக செல்லும் இந்திய மாணவர்களின் பகுதிநேர வேலை குறித்த அதிர்ச்சி தகவல்!
அமெரிக்காவில் உயர்கல்வி பயில்வதற்காக செல்லும் இந்திய மாணவர்களின் பகுதிநேர வேலை குறித்த அதிர்ச்சி தகவல் தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உயர்கல்விக்காக செல்லும் மாணவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவது தற்போது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கல்வி பயில்வதற்காக இந்தியாவில் இருந்து சென்ற மாணவர்கள், தங்களின் அன்றாட செலவுகள், தேவைகளுக்காக கேஸ் ஸ்டேஷன், சூப்பர் மார்க்கெட்டுகளில் பகுதிநேர வேலைகள் செய்வது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் தற்போதைய விதிப்படி, மாணவர்கள் கல்லூரியின் வளாகங்களில் மட்டுமே பணியாற்ற முடியும். வெளியே சென்று பணிபுரிய முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால், வேறு வழியில்லாத சூழலில், எப்படியாவது வருமானம் ஈட்ட வேண்டுமே என்பதற்காக, இந்திய மாணவர்கள், குழந்தை பராமரிப்பாளர் பணிகளில் அதிகம் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக ஒஹியோவில் படிக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், நான் 6 வயது குழந்தையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் இந்த வேலையை செய்கிறேன். இதற்காக, எனக்கு ஒரு மணிநேரத்திற்கு 13 டாலர் பெறுகிறேன். உணவையும் அங்கேயே சாப்பிட்டு கொள்வேன், எனக் கூறினார். மேலும், இது மிகவும் பாதுகாப்பான வேலையாக இருப்பதாக பல இந்திய மாணவர்கள் கூறுகின்றனர். இதே வேலைக்கு நிறைய பேர் தயாராக இருப்பதால், சம்பளம் குறைவாக கொடுப்பதும் நடக்கிறது. ஓபன் டோர்ஸ் அறிக்கையின் அடிப்படையில், டெக்ஸாஸில் 39 ஆயிரம் பேரும், இலினாய்ஸில் 20,000 பேரும், ஒஹியோவில் 13,500 பேரும், கனெக்டிகட்டில் 7,000 இந்திய மாணவர்களும் உள்ளனர்.
இவர்களில் 50 சதவீதம் பேர் டெக்ஸாஸ், நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற மாகாணங்களில் தேவைக்கு குறைவான ஊதியத்துடன், குழந்தை பராமரிப்பாளர்களாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.எனவே, பகுதி நேர வேலை கிடைக்கும் என்று நம்பி அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.