ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம் - உயர்த்தப்படாத உதவித்தொகையால் ஆர்வமின்மை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 27, 2024

Comments:0

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம் - உயர்த்தப்படாத உதவித்தொகையால் ஆர்வமின்மை

ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பம் உயர்த்தப்படாத உதவித்தொகையால் ஆர்வமின்மை
fe150879-23b9-4f35-bc0a-888ac323a28d


தமிழகத்தின் ஊரக பகுதிகளில் படிக்கும் மாணவ, மாணவிய-ருக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இதில், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்கும், 9 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். தேர்வில் மாவட்டத்துக்கு, 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுக்கு, 1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு ஊரக திறனாய்வு தேர்வு, டிச., 14ல் நடைபெற உள்ளது. நவ., 20 வரை விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்-துள்ளது. அனைத்து மாணவர்களையும், விண்ணப்பிக்க வைக்கும்-படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இத்-தேர்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பங்கேற்கும் தேர்வர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் ஊரக திற-னாய்வு தேர்வு, 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரு-கிறது. கடந்த, 25 ஆண்டுகளாக இந்த உதவித்தொகை உயர்த்தப்ப-டாமல், அதே, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால், இதை பெறுவதற்கான போட்டி மனப்பான்மை, மாணவர்களிடம் இல்லை. இதனால், ஊரக திறனாய்வு தேர்வுக்கு கட்டாயப்ப-டுத்தி, விண்ணப்பிக்க வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதில் பலரும் தேர்வில் பங்கேற்பதில்லை. உதவித்தொகையை உயர்த்தி வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84728795