50க்கும் மேற்பட்ட இதர பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 02, 2024

Comments:0

50க்கும் மேற்பட்ட இதர பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிப்பு

50க்கும் மேற்பட்ட இதர பணிகளால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிப்பு

ஆசிரியர்கள், 50க்கும் மேற்பட்ட இதர பணிகளில் ஈடுபடுவதால், கற்பித்தல் பணி பாதிப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், வட்டார பொதுக்குழு கூட்டம், கிருஷ்ணகிரி பழையபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது. வட்டார தலைவர் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தார். வட்டார செயலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். கூட்டத்தில், மானிய கோரிக்கையில், ஆசிரியர்களின் தேவையற்ற நிர்வாக பணிச்சுமை குறைக்கப்படும் என அறிவித்த பின், பல்வேறு நடைமுறை மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால் தற்போது ஆசிரியர்கள், 50க்கும் மேற்பட்ட பணிகளில் ஈடுபடுவதால், கற்றல் கற்பித்தலுக்கான நேரம் குறைகிறது. எனவே, ஆசிரியர்களின் தேவையற்ற பணிகளை குறைக்க வேண்டும். சமீபத்தில், ஓய்வு பெற இருக்கும் ஒரு ஆசிரியர், மாணவரை அடித்ததாக நடவடிக்கை எடுத்தனர்.

மாணவியர் மீது, சிகரெட் புகைவிட்ட மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுத்தது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடப்பது, வருங்கால சந்ததிகள் மோசமான நிலைக்கு செல்வதை ஊக்குவிக்கும். எனவே, தகுந்த சட்ட திருத்தங்களை கொண்டு வருவது, வருங்காலத்தை நல்வழிப்படுத்தும். காலை உணவு திட்ட கண்காணிப்பு பணியிலிருந்து ஆசிரியரை விடுவித்து, உள்ளூரிலுள்ள கவுன்சிலர் போன்றவர்களை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ரங்கப்பன், செயலாளர் ஆரோக்கியசாமி, பொருளாளர் திம்மராயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews