அரசுப்பள்ளி மாணவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்
பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்த மாணவரை பாராட்டிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அபிஷேக் பேட்டரியால் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார். அந்த சைக்கிளில் தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார்.
இதை கேள்விப்பட்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது 'எக்ஸ்' வலைதள பதிவில் மாணவர் அபிஷேக்கை பாராட்டி அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைக்கு எடுத்துக்காட்டாக திகழும் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம் என பதிவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாணவர் அபிஷேக்கை தொலைபேசியில் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர் பேசும்போது, உங்கள் கண்டுபிடிப்புகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் நீங்கள் முன் மாதிரியாக திகழ்கிறீர்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் தெரிவித்தால் அதை நடைமுறை செய்யலாம். உங்களுக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.
Search This Blog
Saturday, October 05, 2024
Comments:0
Home
anbil mahesh poyyamozhi
அரசுப்பள்ளி மாணவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்
அரசுப்பள்ளி மாணவரை தொலைபேசியில் அழைத்து பாராட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.