ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 27, 2024

Comments:0

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர கோரிக்கை!

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர கோரிக்கை!



தமிழகத்தில் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்பெல்லாம் ஆசிரியர் என்றால் மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆனால், தற்போது ஆசிரியர் என்றால் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் சில ஆண்டுகளாக ஆசிரி யர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது. வகுப்பறை கற்பித்தல் பணியில் ஈடுபட முடிய வில்லை. இதனால், ஆசிரியர்கள் கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், ஆசிரியர் கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, இதயநோய் காரணமாக பல ஆசிரியர்கள் வகுப்பறையில் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சம்பவம் தமிழகத்தில் பள்ளிகளில் நடந்துள்ளன. மேலும், திருவாரூர் மாவட்டத் தில் ஒரு பள்ளியில் கட்டிட வேலையில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர். ஆசிரியர் ஒருவரை தாக்கியதில் அந்த ஆசிரியருக்கு கால் முறிவு ஏற்பட்டு அவர் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். இந்த அளவுக்கு ஆசிரியர்கள் மீது வன்மம் ஏன் ? சமீபகாலமாக இது போன்ற சம்பவங்கள் தமிழ் நாட்டில் பல இடங்களில் நடந்து வருகின்றன. ஒழுக்கம் மிக்க மாணவர்களாக வரக்கூடிய மாணவர்கள் கட்டுப்பாடுகளை மீறி நடந்துக்கொள்கின்றனர். இதைத்தடுக்க வேண்டிய தமிழக அரசும், காவல் துறையும் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. எனவே, மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இருப்பதை போல தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்து ஆசிரியர்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews