ITR e-filing தேதி நீட்டிப்பு எனப் பரவும் தவறான செய்தி!
வருமானவரி Return செய்வதற்கான e-filing தேதி 31.08.2024 வரை நீட்டிக்கப்படுவதாக ஒரு தவறான செய்தி - தவறான புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அவ்வாறான எந்தவொரு தேதி நீட்டிப்பையும் வருமான வரித்துறை தற்போது வரை (20.07.2024 ISD 05:45AM) வெளியிடவில்லை. தற்போதைய நிலவரப்படி ஜூலை 31 தான் e-filing செய்ய இறுதி நாள்.
பரப்பப்படும் படத்தின் உள்ள ஆங்கிலப் பத்தியின் உண்மையான செய்தி என்னவெனில், *”Income Tax Portal & AIS / TIS update ஆவதில் எழுந்துள்ள சிக்கல்களால் Income Tax Return செய்யும் தேதியை ஜூலை 31ல் இருந்து ஆகஸ்ட் 31ற்கு மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது"* என்பதே.
மேலும், ICAI (The Institute of Chartered Accountants of India) என்னும் இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் நடப்பு ஆண்டில் e-filing செய்யும் போது எழும் 9 விதமான குறைபாடுகள் குறித்து 05.07.2024 அன்று வருமானவரித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதே போன்ற குறைபாடுகள் காரணமாக e-filing தேதியை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு மட்டங்களிலும் எழுந்துள்ளது.
அதுபோன்றதொரு கோரிக்கைக் கடிதத்தின் / செய்தியின் Screen Shot தான் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுவிட்டதாகத் தவறான புரிதலில் பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இறுதித் தேதியை மாற்றம் செய்வது குறித்து எந்தவித அறிவிப்பையும் வருமானவரித் துறை இதுவரை வெளியிடவில்லை. ஒருவேளை சிக்கல்களின் தீவிரத்தை உணர்ந்து தேதி நீட்டிப்பு செய்யும் அறிவிப்பு வரும் வாரங்களில் வந்தாலும் வரலாம் என்றாலும் அதை உறுதியாகக் கூறமுடியாது என்பதால் 31.07.2024ற்குள் e-filing செய்துவிடுவது நல்லது.
Search This Blog
Saturday, July 20, 2024
Comments:0
ITR e-filing தேதி நீட்டிப்பு எனப் பரவும் தவறான செய்தி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.