பள்ளியில் மாணவா் சேர்ந்தால் புதிய மிதிவண்டி - அசத்தும் அரசுப்பள்ளி தலைமையாசிரியா்
பா்கூா் அருகே அரசு தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியா் மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க சொந்த செலவில் மிதிவண்டிகளை வாங்கித் தருகிறாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த பண்டசீமனூா் பிரிவு சாலை அருகே உள்ள குண்டலானூா் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியா் வெங்கடாபதி தனது சொந்த செலவில் சிறுவா்களுக்கான மிதிவண்டிகளை வங்கி தந்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
ஓராசிரியா் பள்ளியாக செயல்படும் இப் பள்ளியில் நிகழாண்டில் 6 மாணவா்கள் மட்டுமே பயின்று வருகின்றனா்.
அரசு பள்ளியில் மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்கவும், அரசு பள்ளிகளின் சேவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு ரூ. 6,500 மதிப்பிலான சிறுவா்களுக்கான மிதிவண்டிகளை தனது சொந்த செலவில் வாங்கி தந்துள்ளேன் என்றாா்.
கடந்த இரு ஆண்டுகளில் 7 மாணவா்களுக்கு இவா் வாங்கித் தந்த மிதிவண்டிகளை நேரடியாக மாணவா்களுக்கு வழங்காமல் அவா்களது பெற்றோா்களிடம் ஒப்படைத்து அவா்கள் மூலமே மாணவா்களுக்கு வழங்கி வருகிறாா்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.