"யுஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. " என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யுஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மாணவர்களின் தகுதிக்கான அளவுகோல் எனப் பொய்வேடம் தரித்த நீட் தேர்வு ஒரு மோசடி என்பதையும், ‘மாணவர்களுக்கு எதிரான - சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான’ இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மோசடிகளையும் கண்டித்ததோடு, நீட் தேர்வு முறையை ஆதரிப்பதை மத்திய அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
அதனைத் தொடர்ந்து தற்போது தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யுஜிசி-நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு வாரியம் (NBE) நடத்தும் முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருபது ஆயிரக்கணக்கான நமது மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது. இவை எப்போதோ ஏற்படும் அரிய நேர்வுகளாக இல்லாமல், கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தேர்வுமுறையின் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் இறுதி ஆணிகளாக அமைந்துள்ளன.
இந்த முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், தொழில்முறைப் படிப்புகளுக்கான நியாயமான, சமத்துவத்தன்மை கொண்ட தேர்வுமுறையை ஏற்படுத்தி, பள்ளிக்கல்வியின் முதன்மையை உறுதிசெய்து, உயர்கல்விக்கான அடிப்படையாக அதனை ஆக்கி, தொழில்முறைப் படிப்புகளுக்கான தேர்வுமுறையைத் தீர்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுத்து, அனைத்துக்கும் மேலாக, நமது மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து சிறப்பான எதிர்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோப்போம்!” என்று தெரிவித்துள்ளார்
Search This Blog
Sunday, June 23, 2024
Comments:0
Home
Chief Minister M. K. Stalin
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் மருத்துவர்கள் விரக்தி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் மருத்துவர்கள் விரக்தி: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.