அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்... பழைய பென்சன் திட்டம் குறித்து அமைச்சர் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை திரும்பப்பெற்று, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்களும் ஆசிரியர்களுக்கும் கோரிக்கை விடுத்து வருவதோடு, பல்வேறு கட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது.
"பழைய ஓய்வூதியத் திட்டம் - பரிசீலனையில் உள்ளது"
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழு, ஓய்வூதிய ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இது குறித்த அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது- சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
CLICK HERE பழைய பென்சன் திட்டம் குறித்து அமைச்சர் அறிவிப்பு VIDEO
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.