ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 06, 2024

Comments:0

ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்



ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடையின்மை சான்று அவசியம்: பள்ளிக்கல்வி இயக்குநரிடம் அனுமதி பெற அறிவுறுத்தல் Proof of non-obstacle required for teachers to travel abroad: Instruction to obtain permission from Director of School Education

பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் உள்ளிட்டோர், மாவட்டக் கல்விஅலுவலர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கடவுச்சீட்டு பெறவும், புதுப்பிக்கவும் தடையின்மைச் சான்று வழங்க அனுமதித்து 2013-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுதவிர, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு, அனுமதி அளிக்கும் அதிகாரம் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உண்டு.

எனினும், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் வெளிநாடு செல்ல, துறைத் தலைவரான பள்ளிக் கல்வி இயக்குநரிடம் மட்டுமே விடுப்பு அனுமதி பெறவேண்டும். இது சார்ந்த கருத்துருகள் துறை இயக்குநருக்கு அனுப்பப்பட்டு, உரிய அனுமதி பெற வேண்டும்.

இந்த விவகாரத்தில் 2007-ல் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews