பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
பொறியியல் சோ்க்கைக்கான கலந்தாய்வானது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் மாதம் இணையவழியில் நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-இல் தொடங்கி ஜூன் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 2,49,918 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா்.
அவா்களில் 2,06,012 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும், 1,78,180 போ் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தும் உள்ளனா்.
இதனிடையே, விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோா்கள், மாணவா்கள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
அதை ஏற்று பொறியியல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு 01800-425-0110 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
2024-25ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், ஜூன் 10, 11 ஆகிய 2 நாட்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.*
பொறியியல் கலந்தாய்வு - ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு
*பொறியியல் கலந்தாய்வு - ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு.
*தமிழ்நாட்டில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர 2,48,848 பேர் விண்ணப்பம்.
ஜூலை 10ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!
அதற்கு முன்பாக எந்த பாட பிரிவு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை ஒருமுறைக்கு இருமுறையாக செக் பண்ணிக்கோங்க. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இதுவரை 2.35 லட்சம் பேர் விண்ணப்பங்களைப் பதிவு செய்திருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் 2024-25 ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பப் பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
அதன்படி, இதுவரை 2 லட்சத்து 35 ஆயிரத்து 709 பேர் விண்ணப்பப் பதிவு செய்து இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பப் பதிவு செய்துள்ள 2 லட்சத்து 35 ஆயிரத்து 709 பேரில், 1 லட்சத்து 87 ஆயிரத்து 517 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 58 ஆயிரத்து 38 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பப் பதிவை நிறைவு செய்திருப்பதாகவும் புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு வருகிற ஜூன் 12ம் தேதி (புதன்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 12ம் தேதியன்று ரேண்டம் எண் வெளியிடப்பட்டு, 13-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. தரவரிசைப் பட்டியல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
Search This Blog
Tuesday, June 11, 2024
Comments:0
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.