பொறியியல் படிப்பு... இன்று ரேண்டம் எண் ஒதுக்கீடு.. நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 12, 2024

Comments:0

பொறியியல் படிப்பு... இன்று ரேண்டம் எண் ஒதுக்கீடு.. நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!



Engineering course...random number allotment today..certificate verification work starts from tomorrow! பொறியியல் படிப்பு... இன்று ரேண்டம் எண் ஒதுக்கீடு.. நாளை முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!

தமிழகம் முழுவதும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புக்களில் சேர 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த இடங்கள் அனைத்தும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கியது.

இதற்கான காலஅவகாசம் ஜூன் 6ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 2,48,848 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு அரிய வாய்ப்பாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைகிறது. ஜுன் 6ம் தேதியுடன் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்காக கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதில் ஏற்கனவே 2 லட்சத்து 4 ஆயிரத்து 439 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். இன்னும் 1 லட்சத்து 76 ஆயிரத்து 145 பேர் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து விட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்து விட்ட நிலையில், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ஜூன் 12ம் தேதி ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் மாணவர்களுக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். நாளை ஜூன் 13ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். பிறகு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews