ஓய்வூதியர்கள் வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்! No deadline has been set for pensioners to submit a letter regarding tax deduction (New Regime / Old Regime) - Treasury Accounts Commissioner's explanation!
ஓய்வூதியர்கள் 15.05.2024க்குள் தங்களது வருமான வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க வேண்டும் என்று எவ்வித கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்!
செய்தி வெளியீடு எண்: 671
फ्री: 14.05.2024
செய்தி வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் சுமார் 7 இலட்சம் ஓய்வூதியர்கள் சென்னையில் உள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் மற்றும் 37 மாவட்ட கருவூலங்கள் மூலமாக தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக ஓய்வூதியர்களின் மாதாந்திர ஓய்வூதியத்திலிருந்து வருமானவரி புதிய நடைமுறைப்படி பிடித்தம் செய்ய வேண்டுமா அல்லது பழைய நடைமுறைப்படி பிடித்தம் செய்யப்பட வேண்டுமா என்ற விவரத்தினையும் ஓய்வூதியர்கள் தங்களது பேன்கார்டு எண்ணையும் சம்மந்தப்பட்ட கருவூலத்திற்கு 15.05.2024-குள் தெரிவிக்க வேண்டுமென கருவூலக் கணக்குத் துறை ஆணையர் அறிவுறுத்தியதாக 14.05.2024 நாளிட்ட பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டவாறு கருவூலக் கணக்குத் துறை ஆணையரகத்திலிருந்து எந்தவிதமான சுற்றறிக்கையோ அல்லது அறிவுறுத்தலோ கருவூலங்களுக்கோ மற்றும் ஓய்வூதிய சங்கங்களுக்கோ வழங்கப்படவில்லை. மேலும் பேன்கார்டு எண்ணை சமர்பித்தல் மற்றும் வருமானவரி பிடித்தம் செய்யும் முறையினை (புதிய/பழைய) தேர்ந்தெடுத்தல் போன்றவற்றிக்கு எந்தவிதமான காலஅவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை.
எனவே, 14.05.2024 அன்று பத்திரிக்கைகளில், ஓய்வூதியர்கள் வருமானவரி பிடித்தம் தொடர்பான விவரங்களை 15.05.2024-க்குள் சமர்பிக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்து வெளிவந்த செய்திகள் கருவூலக் கணக்குத் துறை ஆணையரகத்தினால் வெளியிடப்படவில்லை எனவும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது.
கருவூலக் கணக்கு ஆணையர்
Search This Blog
Wednesday, May 15, 2024
Comments:0
Home
pensioners
Treasury Offices
ஓய்வூதியர்கள் வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்!
ஓய்வூதியர்கள் வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்!
Tags
# pensioners
# Treasury Offices
CPS Missing Credit - Online Portal-லில் பதிவேற்றம் செய்ய கோருதல் - Treasury Letter
ஓய்வூதியர்கள் வரி பிடித்தம் தொடர்பாக (New Regime / Old Regime) கடிதம் அளிக்க கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை - கருவூல கணக்கு ஆணையர் விளக்கம்!
கருவூல அலுவலகங்களில் ஓய்வூதியா்களுக்கு மருத்துவ முதலுதவி, சிறப்பு கவுன்ட்டா்கள்:தமிழக அரசு உத்தரவு
Labels:
pensioners,
Treasury Offices
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84603198
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.