அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நலத் திட்டங்கள்: அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்கள், சீருடை, புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்ட பொருள்களை வழங்குவது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளுக்கு முக் கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறி வொளி, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப் பன் ஆகியோர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கடிதம்:
2024-2025-ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் நாளன்றே நலத்திட்டப் பொருள்கள் மாணவர்களுக்கு வழங் கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வரும் கல்வியாண்டுக்கான (2024-2025) நலத் திட்டப் பொருள்கள் விநியோக மையங்களிலிருந்து மே 31-ஆம் தேதிக்குள் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண் டும். நலத் திட்டங்கள் விநியோக மையங்கள், பள்ளிகளில் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்ய வேண்டும். குறுஞ்செய்தி மூலம் தகவல்: நலத் திட்டப் பொருள்கள் வழங்குவதற்கு ஆசிரியர்கள், மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது.
மாணவர்களுக்கான பொருள்கள் வழங்கப்பட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்தவுடன் மாண வர்களின் பெற்றோரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி உடனடியாக அனுப்பப்படும். இதில், ஆசிரியர்கள் கவன மாக செயல்பட அறிவுறுத்த வேண்டும்.
இரு கட்டங்களாக... இந்தக் கல்வியாண்டில் மாணவர்க ளுக்கு 2 கட்டங்களாக நலத் திட்டங்களை வழங்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதல்கட்டமாக, பாட நூல்கள், நோட்டுப் புத்தகம், புவி யியல் வரைபடம், தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் பணி கள் கழகத்தால் விநியோகம் செய்யப்பட்டு, அதற்கான தரச் சான்று வழங்கப்பட்டு, முழுமையாகப் பெறப்பட்டுள்ள இதர கல்வி உபகரணப் பொருள்கள் ஆகியவை பள்ளித் திறக் கும் நாளன்று வழங்கப்பட வேண்டும்.
2-ஆம் கட்டமாக, இதர நலத்திட்டப் பொருள்களைப் பெற்று விநியோக மையங்களில் சேமித்து வைத்து ஜூலை 15-ஆம் தேதி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.