பத்தாம் வகுப்பு: தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
சென்னை, மே 3: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்க ளுக்கும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் துணைத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
தமிழத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப். 8 வரை நடைபெற்றது. அதில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந் துள்ளன. தேர்வு முடிவுகள் வரும் 10- ஆம் தேதி வெளியாகவுள்ள நிலை யில், 'தொடர்ந்து கற்போம்' எனும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர் கள், துணைத்தேர்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வாராந்திர தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள் ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றிக்கை:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப் பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 'தொடர்ந்து கற்போம்' எனும் திட்டம் கீழ் மார்ச் 2023 மாதம் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந் துள்ளனர். நிகழாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வுக்கு வருகை தராத மாணவர்களுக்கும் உயர் நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மூலமாக சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு வாராந்திர தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூ லம், மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடரமுடியும்.
பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். சிறப்பு வகுப்புக்கு மாணவர்கள் வருவதை பள்ளி தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் திட்டமிட் டபடி வரும் 6-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மீண்டு உறுதிப்படுத்தியுள்ளனர். SSLC தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: துணை தேர்வுக்கு தயார்படுத்த நடவடிக்கை Special coaching for students who have not passed SSLC: Steps to prepare for supplementary examination
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் எம்.ஆர்த்தி,பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கூட்டாக அனுப்பியுள்ள சுற்றிக்கை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 6 முதல் 18 வயதுடைய, பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், `தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தின் வாயிலாக 45 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
நடப்பு கல்வி ஆண்டில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வெழுதாத மாணவர்களுக்கு உயர்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கு வாராந்திர தேர்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்புபயிற்சி, தேர்வு முடிவு வெளியாகும்நாள் முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை நடைபெறும். இதன்மூலம், மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர முடியும்.
பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் வீடுகளுக்கு சென்றுசிறப்பு பயிற்சி மையத்துக்கு அழைத்து வர பள்ளி மேலாண்மைகுழ உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு வகுப்புக்குமாணவர்கள் வருவதை பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.