மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2024

Comments:0

மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6 கடைசி

மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6 கடைசி

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தில் 11 உறுப்பு கல்லூரிகளும்ஓர் இணைவு கல்லூரியும் இயங்கி வருகின்றன. பிஎப்எஸ்சி படிப்பு தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு மீன்வளக் கல்லூரிகளிலும், பிடெக் (மீன்வள பொறியியல்), பிடெக் (சுற்றுச்சூழல் பொறியியல்) படிப்புகள் நாகப்பட்டினம் மீன்வள பொறியியல் கல்லூரியிலும் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் மொத்தம் 371 இடங்கள் உள்ளன.

வரும் கல்வி ஆண்டில் மீன்வள படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7-ம் தேதி (நேற்று) தொடங்கியது. பிளஸ்-2 முடித்த மாணவர்கள் https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூன் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.300 மட்டும். தகுதியுள்ள மாணவர்கள் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை தயாரிக்கப்பட்டு அதன்மூலம் தேர்வுசெய்யப்படுவர். இதற்கு கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 04365-256430, 9442601908 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews