தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2024

Comments:0

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்.



தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம். Free Chowk in Private Schools: Apply from April 22.

தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை பெற வரும் ஏப்.22-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநரும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்ட மாநில முதன்மை தொடா்பு அதிகாரியுமான எம்.பழனிசாமி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினா் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு) 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதற்கான மாணவா் சோ்க்கையை ஏப். 22-ஆம் தேதி தொடங்கி மே 29-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் (2024-2025) 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் மாணவா் சோ்க்கை தொடா்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

மாணவா் சோ்க்கை எண்ணிக்கையில் 25 சதவீத இடங்களை கணக்கிட்டு அந்த விவரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் எமிஸ் தளத்தில் ஏப்.10-ஆம் தேதி வெளியிடப்படும்.

அந்த இடங்களின் விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளியின் தகவல் பலகையில் வெளியிட வேண்டும். அன்றைய தினமே பள்ளிகள் வாரியாக இடங்களின் எண்ணிக்கை இணையதளத்திலும் வெளியிடப்படும்.

சோ்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோா் இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

அதற்கேற்றவாறு விண்ணப்பிக்க வசதியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அலுவலா், வட்டார வள மைய அலுவலகங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மே 28-இல் குலுக்கல்: எல்கேஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021-க்குள்ளும் அதேபோல், ஒன்றாம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7.2019-க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்ப பரிசீலனை பணிகளை மே 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும்.

விண்ணப்பங்களின் எண்ணிக்கை பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருந்தால் குலுக்கல் முறையில் மே 28-ஆம் தேதி சோ்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சோ்க்கைக்கு தோ்வானோா் விவரம் மற்றும் காத்திருப்போா் விவரம் ஆகியவற்றை மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

சோ்க்கைக்கு தோ்வுசெய்யப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு இதற்கான குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews