JEE 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடைபெறும்.
இதில் முதன்மைத் தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரியில் நடத்தப்பட்டு, முடிவுகள் பிப்ரவரியில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்.4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 544 மையங்களில் 10.67 லட்சம் பேர் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை என்டிஏ நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இதையடுத்து மாணவர்கள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இருகட்ட முதன்மைத் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் என்.முகுந்த் பிரதீஷ், என்.ராம் உட்பட 56 பேர் வரை முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதுதவிர இரு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அதிக மதிப்பெண் கணக்கில் கொள்ளப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/69227700 ஆகிய எண்கள் அல்லது jeemain @nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
JEE மெயின் தேர்வு முடிவு வெளியீடு: நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை!
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு:
நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை.
ஜேஇஇ மெயின் தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்து உள்ளனர். ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமை(என்டிஏ) ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.
2024 - 25 கல்வியாண்டில் சேர்வதற்காக இந்த தேர்வை கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தியது.
13 மொழிகளில் நாடு முழுவதும் 319 நகரங்களில் நடத்தியது. வெளிநாட்டிலும் தேர்வு நடந்தது.
முதல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இரண்டாம் கட்டமாக நடந்த தேர்வு முடிவினை என்டிஏ வெளியிட்டு உள்ளது. இந்த தேர்வை எழுத 11,79,569 பேர் பதிவு செய்த நிலையில் 10,67,959 மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 56 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
அவர்களில் 15 பேர் தெலுங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவை சேர்ந்த தலா 14 பேர் மற்றும் டில்லியைச் சேர்ந்த 6 பேர் அடங்குவர்.
டில்லியைச் சேர்ந்த ஷாய்னா சிங், மாதவ் பன்சால், தான்யா ஜா, இப்சிட் மிட்டல், பவேஷ் ராமகிருஷ்ணன் கார்த்திக் மற்றும் அர்ஷ் குப்தா ஆகியோர் நூறு மதிப்பெண்கள் பெற்று உள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.