Ennum Ezhuthum - ஒரே வினாத்தாள் வழங்கியதால் தேர்வில் சிரமப்பட்ட மெல்ல கற்கும் மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2024

Comments:0

Ennum Ezhuthum - ஒரே வினாத்தாள் வழங்கியதால் தேர்வில் சிரமப்பட்ட மெல்ல கற்கும் மாணவர்கள்



Ennum Ezhuthum - ஒரே வினாத்தாள் வழங்கியதால் தேர்வில் சிரமப்பட்ட மெல்ல கற்கும் மாணவர்கள் Ennum Ezhuthum - Slow learners who struggled in the exam because they were given only one question paper

எண்ணும் , எழுத்தும் திட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 2 முதல் 5 - ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் அரும்பு மொட்டு , மலர் என 3 வகையாக பிரித்து பாடம் , தேர்வு நடத்தி விட்டு மூன்றாம் பருவத்தில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கி உள்ளதால் மெல்லக் கற்கும் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் சிரமப்பட்டனர். கரோனா காலத்தில் பள்ளி செல்ல முடியாத அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அரும்பு , மொட்டு , மலர் என மாணவர்கள் கற்கும் திறன் அடிப்படையில் பிரிக்கப்பட்டனர்.

அதற்கேற்றவாறு அவர்களுக்கு பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டு முதல் பருவம் , இரண்டாம் பருவம் எனத் தேர்வு நடத்தப்பட்டது . தற்போது ஏப் .2 முதல் 12 - ம் தேதி வரை மூன்றாம் பருவத் தேர்வு நடைபெறுகிறது அதனையொட்டி நேற்று தமிழ்...

அரும்பு, மொட்டு, மலர் என பிரிவுக்கேற்றவாறு வினாத்தாள் வழங்காமல் ஒரே வினாத்தாள் வழங்கியதால் மெல்லக் கற்கும் மாணவர்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:

கரோனா காலத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறனில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய எண்ணும், எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மெல்லக் கற்கும் மாணவர்கள் என அழைப்பதை தவிர்க்க அரும்பு என்றும், சுமாராக படிக்கும் மாணவர்களை மொட்டு என்றும், நன்றாக படிக்கும் மாணவர்களை மலர் என்றும் பிரித்தனர்.

அதற்கேற்றவாறு பாடப் புத்தகங்களும் வழங்கியதால் அதற்கேற்றவாறு பாடம் நடத்தி பயிற்சி அளித்தோம். அவ்வாறே கடந்த 2 ஆண்டாக தேர்வு நடத்தி னோம். ஆனால், இந்த திட்டம் அடுத்த ஆண்டுடன் முடி வடைகிறது. இந்நிலையில் தற்போது மூன்றாம் பருவத் தேர்வு நேற்று தொடங்கியது. அதில் அரும்பு, மொட்டு, மலர் என தனித்தனியாக வினாத்தாள் வழங்காமல் ஒரே வினாத்தாள் வழங்கியதால் மெல்ல கற்கும் மாணவர்கள் மிகவும் சிரமத்தோடு தேர்வு எழுதினர். வட்டார வள மையம் சார்பில் வழங்கிய வினாத்தாளை ஒவ் வொரு வகுப்புக்கும் ஒரே மாதிரியாக வழங்கியதற்கு முறை யாக காரணம் தெரிவிக்கவில்லை. என்றனர்.

இதுகுறித்து வட்டார வள மையத்தினர் கூறுகையில், 2 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் திறனில் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கோடு இம் முறை ஒரே மாதிரியான வினாத் தாள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தெரிந்த வினாக் களுக்கு விடையளிப்பதன் மூலம் அரும்பு, மொட்டு, மலர் என பிரித்து மதிப்பீடு செய்யப்படும். என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews