தேர்தல் பணி - கவிதையாய்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 12, 2024

Comments:0

தேர்தல் பணி - கவிதையாய்...



தேர்தல் பணி - கவிதையாய்...

மனதுக்குள் தேர்தல் ஒத்திகை

இப்போதே

அடிக்கடி

நடக்கிறது..

மசங்கலாக

ஒரு பூத்

நினைவில்

வந்து போகிறது..

பாழடைந்து

போன

கழிவறை ஒன்று

கண் முன்னே

வந்து பயமுறுத்துகிறது..

தண்ணீர் வசதி

நினைத்தால்

கண்ணீர்

வருகிறது.. மண்டல அலுவலர்

மண்டைக்குள்

மங்கலாக

யாரோ ஒருவர்

சட்டென

நுழைகிறார்..

உடன்

பணியாற்றுபவர்

பற்றி

முன்பே தெரிந்துவிட்டதால்

சற்று நிம்மதி..

Mock pollல்

ஒரு பதற்றம்..

Seal வைப்பதில்

சின்ன சிக்கல்..

ஏஜென்டுகள் முன்னே

அந்த வியர்த்த முகத்தோடு

ஒரு முறை கண்ணாடியை

இப்போதே

பார்க்கிறேன்..

Bvc

Crc

எல்லாம்

அன்று

கடவுளாய்

கைகொடுக்கும்..

17Aம்

Total buttonம்

ஒன்றாய் வர

குலதெய்வத்தை

கும்பிடுகிறேன்.. முந்நாள்

பூத்தில்

நன்கு

கவனிப்பதும்

முடிந்தபிறகு

தண்ணீர் கூட

இல்லாமல் தவிப்பதும்

தேர்தல் நடைமுறைகளில்

எழுதப்படாத விதிகளில்

ஒன்றாகும்..

வரிசையில்

வாக்காளர்கள்

நகர்வது

ஒரு நிழலாய்

உள்ளத்துக்குள்

ஓடுகிறது..

வாக்குப்பதிவு

முடிவில்

ஒரு பரபரப்பு..

சீல் இடுவதில்

ஏஜென்டுகளின்

சலசலப்பு..

காதில் கேட்கிறது.. Zonal வரும் வரை

வாசலில் கதவாய்

காத்திருந்து

கன்னிப்பெண்

போல

பாதுகாத்த

BU ,CUஐ

அவர் வாங்கிக்கொண்டு...

கோணிப்பையில்

வாரி மற்றதை

போட்டுக் கொள்ளும்

காட்சியும்

நினைவில்

அரங்கேறுகிறது..

PO

17C

Metal seal

வாங்கிக் கொண்டு

பணத்தை

பங்கிட

எண்ணுவதும்

கண் முன்னே

விரிகிறது.. Reserve ல்

வந்துவிட்டால்

இவை எதுவும்

தேவையில்லை என்று

செய்யும்

ஒத்திகையை

கொஞ்சம்

ஒத்தி வைப்பதும்

அடிக்கடி

நிகழ்கிறது..

நன்றி

திரு. ந.வீரா

திமிரி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews