சிவில் சர்வீஸ் தேர்வு: தொடர்ந்து சரியும் தமிழக மாணவர் தேர்ச்சி விகிதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2024

Comments:0

சிவில் சர்வீஸ் தேர்வு: தொடர்ந்து சரியும் தமிழக மாணவர் தேர்ச்சி விகிதம்

சிவில் சர்வீஸ் தேர்வு: தொடர்ந்து சரியும் தமிழக மாணவர் தேர்ச்சி விகிதம் Civil Services Exam: Tamil Nadu student pass rate continues to decline

நடப்பாண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் 50-க்கும் குறைவாகவே தமிழகமாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் ஐஏஎஸ்தேர்வில் தமிழக மாணவர்களின்தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கவலையளிக்கிறது என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகை பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் 1,016 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2016 முதல் தமிழகத்தில் ஐஏஎஸ் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தேர்ச்சி விகிதம் 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தரும், யுபிஎஸ்சி தேர்வுக் குழு முன்னாள் உறுப்பினருமான இ.பாலகுருசாமி கூறியதாவது:

சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் 100 முதல் 200 இடங்களில் வெற்றிபெற்றால்தான் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் ஆகிய பதவிகளைப் பெற முடியும். மாணவர்கள் பாடங்களை ஆழ்ந்து, புரிந்து படிக்க வேண்டும்.

கடின உழைப்பு, முறையானத் திட்டமிடல், நேர மேலாண்மை ஆகிய 3 அம்சங்களைப் பின்பற்ற வேண்டும். தமிழக மாணவர்கள் ஆங்கில தகவல் தொடர்பில் பின்தங்கி உள்ளனர். ஆங்கிலத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.பாடங்களை பகுப்பாய்வு செய்து பார்க்கும் சிந்தனை, அறிவுபூர்வமான சிந்தனை ஆகிய திறன்களைமேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews