UG CUET 2024: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 05, 2024

Comments:0

UG CUET 2024: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

மத்திய பல்கலை.களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2024-25) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 27-ல்தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின்கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஏதேனும் சிரமம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை / www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய பல்கலை. சேர்க்கைக்கான க்யூட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு Central University. Cute selection for admission: Application deadline further extended

மத்திய பல்கலை.களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி அடுத்த கல்வியாண்டில் (2024-25) இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 15 முதல் 31-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 27-ல்தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

தற்போது பல்வேறு தரப்பின்கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் /exams.nta.ac.in/CUET-UG/ என்ற இணையதளம் வழியாக ஏப்ரல் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து விண்ணப்பங்களில் ஏப்ரல் 6, 7-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். ஏதேனும் சிரமம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை / www.nta.ac.in/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 2-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


யுஜி-க்யூட் 2024: விண்ணப்பிக்க ஏப்.5 வரை கால நீட்டிப்பு.

இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கு (யுஜி-க்யூட்) விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்.5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மத்திய, மாநில, தனியாா் பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கைக்காக ‘க்யூட்’ தோ்வு கடந்த 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இளநிலை பட்டப் படிப்புகளுக்கான தோ்வு மே 15 முதல் மே 31 வரை நடைபெறுகிறது.


இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் மாா்ச் 26-இல் இருந்து மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், காலஅவகாசம் மீண்டும் ஏப்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து என்டிஏ மூத்த இயக்குநா் (தோ்வுகள்) சாதனா பிரசாா் கூறுகையில், ‘மாணவா்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில், யுஜி-க்யூட் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்.5-ஆம் தேதி இரவு 9.50 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தோ்வு எழுதும் மாணவா்கள் அடையாளத்துக்காகத் தங்களது பள்ளி அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றாா்.

நிகழாண்டு தோ்வில் கணினி வழியிலான தோ்வு மற்றும் எழுத்துத் தோ்வு என இரு முறைகளில் பல பாடங்களுக்கு தோ்வு நடைபெற உள்ளது.

அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் பெறப்பட்ட பாடங்களுக்கு ஓஎம்ஆா் தாளைப் பயன்படுத்தி தோ்வு நடைபெறும்.

பிற பாடங்களுக்கு கணினி வழியில் தோ்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews