இனியாவது பேராசிரியர் அந்தஸ்து கிடைக்குமா? பாரதியார் பல்கலையின் கீழ், அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கும்பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
பல்கலை மானியக்குழு விதிமுறைகளின் படி, கல்லுாரிகளில் ஆசிரியர்கள் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர் என்ற மூன்று நிலைகளில் வகைப்படுத்தப்படுகின்றனர்
உதவி பேராசிரியராக பணியில் சேரும் ஒருவர், 12 ஆண்டுகள் கடந்து இணை பேராசிரியராகவும், இணை பேராசிரியர் ஆன பின் மூன்று ஆண்டுகள் கழித்து பேராசிரியராகவும் பதவி உயர்வு பெறுவதற்கான முதல்கட்ட தகுதியை பெறுகின்றனர். இத்தகுதி பெறும் நபர்கள், குறைந்தபட்சம் பத்து ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டு இருப்பதுடன், ஆராய்ச்சி சார்ந்த பிரிவில், 120 ஸ்கோர் இருக்க வேண்டியது கட்டாயம்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு இருக்க வேண்டும்.
இவை அனைத்திலும் தகுதியான நபருக்கு, மட்டுமே பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது விதிமுறை.
அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பேராசிரியர் பதவி இதுவரை வழங்கப்படவில்லை.
சமீபத்தில் பாரதியார் பல்கலையின் கீழ், தனியார் கல்லுாரிகளுக்கு பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்பட்டது பல்வேறு தரப்பில், வரவேற்பை பெற்றது.
அதே போன்று, அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை
பல்கலை செனட் உறுப்பினர் மற்றும் அரசு கல்லுாரி முதல்வர் வீரமணி கூறுகையில், அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 30 ஆண்டுகள் பணிபுரிந்தும் பேராசிரியர் அந்தஸ்து வழங்கப்படவில்லை.
அரசாணை எண் 5 வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன; ஆனால், நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.
பேராசிரியர் அந்தஸ்து வழங்காமல் உள்ளதால், அரசு கல்லுாரிகளில் தகுதியான பலர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.
தனியார் கல்லுாரிகளைப்போல், அரசு அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கும் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்றா
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.