மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அமெரிக்க உதவித்தொகைகள் - 2025 US Scholarships for Students, Teachers, Academics, Professionals and Researchers – 2025
அமெரிக்க உதவித்தொகைகள் - 2025
மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு தனித்தனியே உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பல்வேறு தரப்பினருக்கும் 2025ம் ஆண்டிற்கான புல்பிரைட் உதவித்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புல்பிரைட்-நேரு உதவித்தொகை:* புல்பிரைட்-நேரு டாக்டோரல் ரிசர்ச் உதவித்தொகை புல்பிரைட்-நேரு அகாடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்செலன்ஸ் உதவித்தொகை* புல்பிரைட்-நேரு சர்வதேச கல்வி நிர்வாகத்தினருக்கான கருத்தரங்கு
புல்பிரைட்-நேரு விசிட்டிங் சேர் திட்டம் - இமொரி பல்கலைக்கழகம்* புல்பிரைட்-நேரு விசிட்டிங் சேர் திட்டம் - மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகம்* புல்பிரைட்-நேரு போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச் உதவித்தொகை* புல்பிரைட்-நேரு விசிட்டிங் சேர் திட்டம் புல்பிரைட்-கலாம் கிளைமேட் உதவித்தொகை:
புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் டாக்டோரல் ரிசர்ச்* புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் போஸ்ட் டாக்டோரல் ரிசர்ச்.
புல்பிரை-கலாம் கிளைமேட் பெல்லோஷிப்ஸ் பார் அகடமிக் அண்டு புரொபஷனல் எக்ஸ்செலன்ஸ்
இதர உதவித்தொகை திட்டங்கள்:
ஹூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப் திட்டம். புல்பிரைட் பாரின் லேங்குவேஜ் டீச்சிங் அசிஸ்டெண்ட் திட்டம். புல்பிரைட் சர்வதேச ஆசிரியர்களுக்கான கற்பித்தல் திட்டத்தில் சிறப்புமிக்க விருதுகள் புல்பிரைட் சிறந்த கற்பித்தல் மற்றும் சாதனைத் திட்டம்.
புல்பிரைட் ஸ்காலர்-இன்-ரெசிடென்ஸ் திட்டம் போன்ற உதவித்தொகை திட்டங்களிலும் துறை சார்ந்த திறனாளர்கள் விண்ணப்பிக்கலாம். புல்பிரைட் ஸ்பெசலிஸ்ட் புரொகிராம்
உதவித்தொகை விபரம்:
ஜே- 1 விசா, அமெரிக்க சென்று திரும்புவதற்கான விமான பயணச்சீட்டு, கல்விக் கட்டணம், தங்கும் செலவு, மருத்துவக் காப்பீடு உட்பட பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை:
www.usief.org.in எனும் அமெரிக்க-இந்திய கல்வி அறக்கட்டளையின் இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்வித்தகுதி, தொழில்முறை செயல்பாடுகள், தொடர்பியல் திறன், தேசிய சேவை உணர்வு, அமெரிக்காவில் கல்வி, பயிற்சி மற்றும் ஆய்வு மேற்கொள்வதற்கான தேவை, தலைமைப் பண்பு, நோக்கம் உட்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
உதவித்தொகை திட்டத்தைப் பொறுத்து விண்ணப்பத்திற்கான இறுதி தேதி மாறுபடுகிறது.
விபரங்களுக்கு:
https://www.usief.org.in/Fellowships/Fellowships-for-Indian-Citizens.aspx
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.