UPSC தேர்வுகள் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 20, 2024

Comments:0

UPSC தேர்வுகள் ஒத்திவைப்பு



தேர்வுகள் ஒத்திவைப்பு

புதுடில்லி, மார்ச். 20- லோக்சபா தேர்தலையொட்டி சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பாராளுமன்ற லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இது தொடர்பாக அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 15-ம் தேதி வெளியிட்டது. இந்நிலையில் இந்தாண்டின் மத்திய குடிமை பணிகள்

தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி.,யின் சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகளை வரும் மே 26ம் தேதி நாடு முழுதும் நடத்திட திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் முதன்மை தேர்வுகளை ஜூன் 16-ம் தேதி நடத்திட திட்டமிட்டுள்ளதாக யு.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் வெப்சைட்டிலும் பதிவேற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


UPSC சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு 2024 ஒத்திவைப்பு

UPSC சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு 2024 - 16.06.2024 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

UPSC CIVIL SERVICE ( PRELIMS ) EXAM POSTPONED

Date : 16.06.2024 BIG BREAKING: தள்ளிவைப்பு

மக்களவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் UPSC CSE தேர்வுத் தேதிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

மே 26ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மைத் தேர்வு (Prelims) ஜூன் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 26ஆம் தேதி நடப்பதாக இருந்த வனத்துறை தேர்வுகளுக்கான Screening ஜூன் 16ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews