மாணவர் திறன் மேம்பாட்டு போட்டிகள்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டை அறிவதற்கான போட்டிகளை நடத்துவதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. Din Updated on: 11 மார்ச் 2024, 12:03 am அரசுப் பள்ளி மாணவா்களின் திறன் மேம்பாட்டை அறிவதற்கான போட்டிகளை நடத்துவதற்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது.
இதன்மூலம் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையான அரசுப் பள்ளி மாணவா்களின் திறன் சாா்ந்த மதிப்பீட்டை அறிந்துகொள்ள விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, நிகழாண்டில் விநாடி-வினா போட்டிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 12) முதல் மாா்ச் 20-ஆம் தேதி வரை வகுப்பு வாரியாக கணினி வழியில் நடத்தப்பட உள்ளன.
இந்த விநாடி-வினாவுக்கான வினாத்தாளை அந்தந்த வகுப்பாசிரியா் மட்டுமே உருவாக்க வேண்டும். மேலும், மதிப்பீடு முடிந்த பிறகு விடைத்தாளைப் பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவா்களுடன் விவாதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை பின்பற்றி போட்டிகளை நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெறும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவாா்கள்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.