பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 04, 2024

Comments:0

பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர்



பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர் Plus 1 Public Exam Begins Today: 8.25 Lakh Candidates Appear Across Tamil Nadu

சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 4) முதல் தொடங்குகிறது. இத்தேர்வை தமிழகத்தில் 8.25 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கிநடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழி பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் 7,534 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 20,207மாணவர்கள், 5,000 தனித்தேர்வர்கள் மற்றும் 187 சிறை கைதிகளும் அடங்குவர்.

பொதுத்தேர்வுக்கான அறைக்கண்காணிப்பாளர் பணியில் 46,700ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,334 நிலையான மற்றும்பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 154 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கியகாவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டுவர தடை உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக் கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள் விடைத்தாளுடன் சேர்த்துவழங்கப்படும். அதை சரிபார்த்துமாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, துண்டுத்தாள் அல்லது பிறரைபார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews