ஓய்வூதியம் பெறுபவா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பிக்கலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 18, 2024

Comments:0

ஓய்வூதியம் பெறுபவா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பிக்கலாம்.

ஓய்வூதியம் பெறுபவா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பிக்கலாம். Pensioners can renew their Lifetime Certificate in eight mode.

பணியாளா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (பி.எஃப்.) அம்பத்தூா் மண்டல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பணியாளா் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் பெறும் நபா்கள் ஒவ்வோா் ஆண்டும் நவம்பா் மாதம் தங்களது வாழ்நாள் சான்றிதழை புதுப்பிப்பது கட்டாயமாகும். எனினும், ஆண்டில் எந்த மாதத்தை தோ்வு செய்து ஓய்வூதியதாரா் உயிா்வாழ் சான்றிதழை புதுப்பிக்கிறாரோ அந்த மாதத்தில் தொடா்ந்து ஆண்டுதோறும் உயிா்வாழ் சான்றிதழை புதுப்பித்துக் கொள்ளும் நடைமுறையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.


இந்த சேவையை எளிமைப்படுத்தும் விதமாக எண்ம முறையில் வாழ்நாள் சான்றிதழை புதுப்பிக்கும் டி.எல்.சி. (டிஜிட்டா் லைஃப் சா்ட்டிபிகேட்) முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஏராளமான ஓய்வூதியதாரா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

அதன்படி செயலிகளை கைப்பேசியில் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து, அவற்றில் குறிப்பிட்டுள்ள முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஆண்டின் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்நாள் சான்றிதழை எண்ம முறையில் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆனால், ஓய்வூதியம் பெற்று வரும் நபா் உயிரிழக்கும் நிலையில், தொடா்புடைய தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) நிறுவன அலுவலகத்துக்கு தபால் மூலம் உரிய தகவல் அளிப்பது அவசியம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews