ஆய்வக உதவியாளருக்கு 5,907 பணியிடங்கள்.! பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2024

Comments:0

ஆய்வக உதவியாளருக்கு 5,907 பணியிடங்கள்.! பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!



ஆய்வக உதவியாளருக்கு 5,907 பணியிடங்கள்.! பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு.!

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில்; தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப, மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல், அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் ஆகியவற்றுக்கு ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் பணி முக்கியமானதாகும்.

அதன்படி அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் அவசியமானதாக இருந்து வருகிறது. அதற்கேற்ப மொத்தம் 6,397 பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது 5,907 பணியிடங்கள் மட்டுமே உள்ளது.

இதன்மூலம் 490 பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு அனுப்பி இருந்த கருத்துருவை ஏற்று மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர உபரியாக உள்ளஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணியிடமே அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கையை கொண்டு பணிநிரவல் செய்யவும், காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்கள்: பணிநிரவல் செய்ய பள்ளிக் கல்வித் துறை அனுமதி Laboratory Assistant Surplus Vacancies in Government Schools: School Education Department sanctioned for recruitment

அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் உபரி பணியிடங்களை பணிநிரவல் செய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக அடல் டிங்கரிங், உயர் தொழில்நுட்ப, மெய்நிகர் வகுப்பறை மூலம் கற்பித்தல், அறிவியல், மொழி, தொழிற்கல்வி, கணிதம் ஆகியவற்றுக்கு ஆய்வகங்கள் உள்ளன. இந்த ஆய்வகங்களில் ஆய்வக உதவியாளர் பணி முக்கியமானதாகும். அதன்படி அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் அவசியமானதாக இருந்து வருகிறது.

அதற்கேற்ப மொத்தம் 6,397 பணியிடங்கள் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையில், தற்போது 5,907 பணியிடங்கள் மட்டுமே உள்ளது. இதன்மூலம் 490 பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் அரசுக்கு அனுப்பி இருந்த கருத்துருவை ஏற்று மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர உபரியாக உள்ளஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணியிடமே அனுமதிக்கப்படாத பள்ளிகளுக்கு மாணவர் எண்ணிக்கையை கொண்டு பணிநிரவல் செய்யவும், காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் தேவையான பள்ளிகளுக்கு பகிர்ந்து அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews