இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 08, 2024

1 Comments

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

IMG_20240308_131516


⚪️🔴இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்.

19 நாட்களாக மறியல் போராட்டங்களை நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ்.

முதல்வர் விரைவில் அழைத்து பேசுவார் என நம்புகிறோம் - இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட்

பொதுத்தேர்வு, மாணவர் நலன் கருதி போராட்டம் தற்காலிக வாபஸ் - ராபர்ட்

பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தகவல். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

மாணவர் சேர்க்கை , நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு.

கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிப்பதாக CL பள்ளிக்கல்வி இயக்குநர் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் வாபஸ் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்_*

*19 நாட்களாக போராடி வந்த இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.*

*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டெல்லி சென்றிருக்கிறார். அங்கிருந்து போராட்ட களத்திலிருக்கும் மாநில தலைமை ஜே.ராபர்ட் அவர்களுடன் (இடைநிலை ஆசிரியர்களுடன்) தொலைபேசியில் பேசிய பின்பு மதிப்புமிகு பள்ளிகல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போராட்டத்திற்கான சுமுகமான தீர்வு மிக விரைவில் எட்டப்படும் என்பதால் தற்காலிகமாக 19 நாளாக நடைபெற்ற போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.* *போராட்ட நாட்கள் அனைத்தும் தகுதியான விடுப்பாக முறைப்படுத்தப்படும்.*

*மற்ற அனைத்து விபரங்களும் விரைவில் நடைபெறவுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.*

_நன்றி..!!_

_ஜே.ராபர்ட்_ *_SSTA மாநில தலைமை_*

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84613613