பொறியியல் பட்டம் பெற்றவரா? பெல் நிறுவனத்தில் வேலை.
பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்டப் பொறியாளர், பயிற்சிப் பொறியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 23-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் ஃபார்ம் லிங்க் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்:
ப்ராஜெக்ட் பொறியாளர்
பயிற்சிப் பொறியாளர்
பணி இடம்:
பெல் நிறுவனத்தின் மத்திய, கிழக்கு, வடக்கு உள்ளிட்ட மண்டலங்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பணிக்கு அமர்த்தப்படுவர்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்டப் பொறியியல் துறையில் BE/B.Tech/B.Sc ஆகிய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SBI Collect மூலம் ஆன்லைன் வழியாக அல்லது எஸ்.பி.ஐ. கிளை மூலமாக கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பயிற்சி பொறியாளர் – I க்கு விண்ணப்பிக்க ரூ. 177/- செலுத்த வேண்டும்.
ப்ராஜக்ட் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிகக் ரூ.472 செலுத்த வேண்டும். 18% ஜி.எஸ்.டி. வரியுடன் செலுத்த வேண்டும்.
மேலும் PWD/SC/ST விண்ணப்பதாரர்களுக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணம் இல்லை.
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://bel-india.in/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்
ப்ராஜெக்ட் பொறியாளர்
1- ஆண்டு - ரூ. 40,000/-
2- ம் ஆண்டு- ரூ.45,000/-
3- ம் ஆண்டு - ரூ.50,000/-
4-ம் ஆண்டு - ரூ.55,000/-
பயிற்சிப் பொறியாளர்
1- ஆண்டு - ரூ. 30,000/-
2- ம் ஆண்டு- ரூ.35,000/-
3- ம் ஆண்டு - ரூ.40,000/-
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை சமர்பித்து அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
MANAGER (HR/NS-S&CS),
Bharat Electronics Limited, Jalahalli Post,
Bengaluru - 560 013,
இது தொடர்பாக மேலதிக தகவல்களுக்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=Eng%20webadvt%2006032024%20NS1-6-3-24.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
Search This Blog
Sunday, March 17, 2024
Comments:0
பொறியியல் பட்டம் பெற்றவரா? பெல் நிறுவனத்தில் வேலை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.