அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - DEE செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 09, 2024

Comments:0

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - DEE செயல்முறைகள்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - DEE செயல்முறைகள் Extending breakfast program to students studying in primary classes in government aided schools - DEE processes

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6

ந.க.எண்.020255/ கே5/2024.

bitor. 8.03.2024.

பொருள்

தொடக்கக் கல்வி

ஊரகப் பகுதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் - (1 முதல் 5 வகுப்பு வரை ) வகுப்புகளில் தொடக்கநிலை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை ணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு

பார்வை

அரசாணை (நிலை) எண்.43 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை. நாள்.27.07.2022

அரசாணை (நிலை) எண்.01 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை. நாள்.13.01.2023

அரசாணை (நிலை) எண்.33 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை. நாள்.07.06.2023.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முதன்மை செயலாளர் தலைமையில் 08.03.2024 நாளன்று நடைபெற்ற கூட்டத்தில வழங்கிய அறிவுரைகள்

பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும், அறிவிப்பின்படி மாநகராட்சி, நகராட்சி. ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 114,095 தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது. பார்வை 2ல் காணும் அரசாணையின்படிகூடுதலாக 433 மாநகராட்சி, நகராட்சி அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 56,160 மாணவ மாணவிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

பார்வை 3ல் காணும் அரசாணையின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்புறப்பகுதிகள் (மாநகராட்சிநகராட்சி/ பேரூராட்சி) மற்றும் ஊரகப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவ மாணவியரும் பயனடையும் வகையில் 31,008 அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

பார்வை 4 -ன்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மேலும் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடையும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

எனவே வரும் கல்வியாண்டில் (20242025) இத்திட்டம் ஊரகப்பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு பயன் பெறும் நோக்கில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் பள்ளிகல்வி துறை ஆகிய துறைகள் இணைந்து இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை உணவு வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டடஅரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு வழங்கப்பட்டது போல் இத்திட்டத்திற்கும் அப்பள்ளியிலேயே தனியாக உணவுப் பொருட்கள் வைப்பதற்கும். சமையல் செய்வதற்கும் தேவையான இடவசதி அமைத்து கொடுப்பதற்கும். இத்திட்டம் முழுமையாகவும். செம்மையாகவும் செயல்படுத்துவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தாளாளர்/பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்திடவும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய ஒரு குழு அமைத்து 1 வார காலத்திற்குள் அப்பள்ளிகளை பார்வையிட்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவதற்குத் தேவையாக அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர்களை இணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி மாவட்ட அளவில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்

பெறுநர்

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் CLICK HERE TO DOWNLOAD காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துதல் - DEE செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews