வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: தகுதியானவர் விவரம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 04, 2024

Comments:0

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: தகுதியானவர் விவரம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்



வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு தகுதி பட்டியல்: மார்ச் 15-க்குள் சமர்ப்பிக்க உத்தரவு District Education Officer Promotion Eligibility List: Order to submit by March 15

சென்னை: வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் பட்டியலை மார்ச் 15-ம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின்கீழ் வரும் வட்டாரக் கல்வி அலுவலர் பதவியில் 50 சதவீத பணியிடங்கள், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களைக் கொண்டு பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான தகுதிப் பட்டியல், 2024 ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி தயாரிக்கப்பட வேண்டும்.

இதையடுத்து 2011 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னர் நடுநிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியில் சேர்ந்து, 2023-ம் ஆண்டுக்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள்: தகுதியானவர் விவரம் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

சென்னை, மார்ச் 3: வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியலை தொடக்கக் கல்வி இயக்குநரகத்திடம் சமர்ப் பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர் களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களில் 50 சத வீத இடங்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டில் அதற்கான தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டியுள்ளது. 2011 டிச. 31-ஆம் தேதிக்கு முன்னர் நடுநிலைப் பள் ளிக்கு தலைமை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து, 2023-ஆம் ஆண்டுக்குள் வட்டாரக் கல்வி அலுவலர் பதவிக்கான 4 துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதைக் கருத் தில் கொண்டு தகுதியானவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வரும் 15-ஆம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.




நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறாதவர் கள், ஒழுங்கு நடவடிக்கை (17பி) நிலுவையில் உள்ளவர்கள், குற்றவியல் வழக்குகளில் சிக்கியவர்களை இந்த பட்டியலில் சேர்க்கக்கூடாது. மீறி னால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதை கருத்தில்கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி தகுதியானவர்கள் விவரப் பட்டியலை மார்ச் 15-ம் தேதிக்குள் தொடக்கக் கல்வி இயக்குநரத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட 4 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெறாதவர்கள், ஒழுங்கு நடவடிக்கை (17பி) நிலுவையில் உள்ளவர்கள், குற்றவியல் வழக்குகளில் சிக்கியவர்களை இந்தப் பட்டியலில் சேர்க்கக் கூடாது.

விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews