தொடர் அங்கீகாரம் கோரி 29ல் தனியார் பள்ளிகள் ஆர்ப்பாட்டம் Private schools protest on 29th demanding continuous recognition
அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், தொடர் அங்கீகாரம் வழங்கக்கோரி, வரும் 29ம் தேதி, டி.பி.ஐ., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கம் அறிவித்து உள்ளது. சங்கத்தின் மாநில பொது செயலர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2022 - 23 மற்றும் 2023 - 24ம் கல்வி ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தில், அரசின் சார்பில் தனியார் பள்ளி களில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, கல்வி கட்டண பாக்கியை, தாமதமின்றி வழங்க வேண்டும்.அனைத்து சுயநிதி பள்ளிகளுக்கும், தற்காலிக தொடர் அங்கீகாரத்தை தாமதமின்றி, நிபந்தனையும், நிர்ப்பந்தமும் இன்றி வழங்க வேண்டும். அங்கீகாரம் பெற்று, 10 ஆண்டுகளான பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பள்ளிக் கல்வி தலைமை அலுவலகம் உள்ள, டி.பி. ஐ., வளாகத்தில், வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.