அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இனி ஆன்லைன் வழி பயிற்சி Online training for government school teachers
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்த பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்து உள்ள அரசாணை:
இதையும் படிக்க | ஆசிரியர்களுக்கான 75% பயிற்சியை இணைய வழியில் நடத்த முடிவு - அரசாணை வெளியீடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான கற்பித்தல் குறித்த பயிற்சியானது, மாவட்ட, மாநில அளவில் சில பயிற்சி மையங்களில் வழங்கப்படுகிறது. இதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.பயிற்சி பெறுவோர், உணவு, உறைவிட வசதிகளுக்காக, மையங்களில் இருந்து நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது. பயிற்சி மையங்களுக்கு ஆசிரியர்கள் செல்வதால், பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.
எனவே, இனி நேரடி பயிற்சி வழங்காமல், அந்தந்த பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருந்து, ஆன்லைன் வழியில் நடத்தப்பட வேண்டும். வரும் கல்வி ஆண்டில், 75 சதவீத பயிற்சிகளை, ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.