இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 20, 2024

Comments:0

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

1708439773640


இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை

இடைநிலை ஆசிரியர்கள் இரண்டாவது (20.02.2024) நாளாக சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் அரசு அவர்களை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென ஆசிரியர் கூட்டணி கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிவரும் ஆசிரியர்களை அழைத்து பேசி உடனடி தீர்வு காண்க - தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 13 ஆண்டுகளாக இக்கோரிக்கையை முன்வைத்து போராடிவருகிறார்கள். காலவரையற்ற உண்ணாவிரதத்தை நான்கைந்து முறை நடத்தி உள்ளார்கள். அப்போதெல்லாம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளும், மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களும் அழைத்துப் பேசி கோரிக்கையை ஆய்வுசெய்து நிறைவேற்ற குழு அமைத்து கோரிக்கையை தீர்த்து வைப்பதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கடந்த முறை போராடிய பொழுது குழு அமைக்கப்பட்டு உடன் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது ஆயினும் இன்று வரை அதற்கான தீர்வு எட்டப்படவில்லை. தற்போதைய முதல்வர் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவே ற்றப்படும் என த மது தேர்தல் வாக்குறுதி எண் 311. இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்துள்ளார். ஆட்சி அமைத்து 33 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மாணவர் நலன் கருதி கடந்த இரண்டு தினங்களாக இக்கோரிக்கைக்காக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் தலைவர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்றி. உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது செ.முத்துசாமி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84629592