12.02.2024 முதல் 10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு Class 10th and 12th practical examination from 12.02.2024
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு தொடங்க உள்ளன. திருச்சியில் தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு, எந்த குளறுபடிகளும் நடக்காத வகையில் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக மாவட்ட வாரியாக தேர்வு தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் இன்று நடக்கிறது. பிளஸ்2 பொதுத் தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்விற்கான முதன்மை விடைத்தாள்களின் வகைகள், அதனுடன் தைக்கவேண்டிய வரைகட்டத்தாள் மற்றும் வரைபடங்கள் விவரம் ஆகியவை தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் இறுதி வாரத்திலும் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.