Monkey fever - குரங்கு காய்ச்சல் பாதிப்பு 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 13, 2024

Comments:0

Monkey fever - குரங்கு காய்ச்சல் பாதிப்பு 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!!

After exposure to the virus or post-tick bite, in a week a person will have early symptoms such as fever, chills, severe exhaustion, headache, body ache, and conjunctiva inflammation ( redness in the eye). One of the alarming symptoms is itchy and painful rashes on the body

குரங்கு காய்ச்சல் பாதிப்பு 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!! Monkey fever warning for 4 districts!!!

குரங்கு காய்ச்சல் பாதிப்பு: 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, தமிழக எல்லையோர நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடாவில், கியாசனுார் வனநோய் என்ற குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு, 53 பேர் பாதிக்கப்பட்டு; இருவர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உத்தர கர்நாடகம், ஷிவமொகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக, இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தபோக்கு போன்றவை, இதன் முக்கிய அறிகுறிகள்.

பாதிப்பு ஓரிரு வாரங்களில் குணமாகி விடும்; சிலருக்கு தீவிர எதிர்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இவ்வகை காய்ச்சலை, பி.சி.ஆர்., மற்றும் ரத்த பரிசோதனைகள் வாயிலாக உறுதி செய்யலாம்.


இந்நிலையில், கேரளா, கர்நாடக எல்லைகளை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில், மருத்துவ கண்காணிப்பை முன்னெடுக்க, தமிழக பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.

* காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய பரிசோதனை செய்ய வேண்டும்

* கால்நடைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும்; அவை, காடுகளுக்குள் செல்லாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும்

* தொற்றை பரப்பும் உண்ணி பூச்சிகளை கண்டறிந்து அழிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால், கலெக்டர்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews