Budget 2024 - வருமான வரி - மாற்றமில்லை
Budget 2024 - வருமான வரி - மாற்றமில்லை
கடந்த ஆண்டு அறிமுகமான மேற்கண்ட புதிய திட்டம் மற்றும் பழைய வரிவிதிப்பில் மாற்றமில்லை
இடைக்கால பட்ஜெட் என்பதால் வருமான வரி விதிப்பில் மாற்றம் எதுவும் இல்லை!
தற்போதைய வருமான வரி விகிதமே அமலில் இருக்கும்!
- பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் - 2024:
2024 - 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது;
கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது;
11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது;
78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது;
திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது- நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது;
2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்;
4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன;
அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்
ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது;
கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது நரேந்திர மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது;
வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றி நடை போடுவதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்;
நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது;
ரேஷன் கடைகள் மூலம் 80கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது;
கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர்-நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
தற்போதைய நிலையை தொடரும் என நிதியமைச்சர் நிர்மா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு நிதி அறிக்கை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்த நிலையில் இன்றைய உறையில், வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை.
இறக்குமதி வரியிலும் எந்த மாற்றமும் இல்லை.
அதேபோன்று நேரடி மற்றும் மறைமுக வரியிலும் எந்த மாற்றமும் இல்லை.
பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர்ச்சியின் பலன்களை ஏழை மக்கள் அடைய தொடங்கியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.