Paytmன் இந்த சேவைகளுக்கு இனி தடை: ரிசர்வ் வங்கி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 31, 2024

Comments:0

Paytmன் இந்த சேவைகளுக்கு இனி தடை: ரிசர்வ் வங்கி



பேடிஎம்மின் இந்த சேவைகளுக்கு இனி தடை: ரிசர்வ் வங்கி

விதிமீறல்களில் தொடந்து ஈடுபட்டதால் பேடிஎம் மீது இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.

யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு பிப்.29 முதல் புதிய வைப்பு நிதி பெறவோ, கடன் பரிவர்த்தனை மேற்கொள்ளவோ இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைக்க முன்னர் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேடிஎம், வங்கி சார்ந்த விதிமுறைகளைப் பின்பற்றாதது தணிக்கையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

புதிதாக வைப்புநிதி பெறவோ, கடன் பரிவர்த்தைகள் மேற்கொள்ளவோ, வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வரவு செய்யவோ கூடாது என்றும் முன்கூட்டிய பிரீபெய்ட் வசதிகள், வாலெட்கள், பாஸ்டேக், போக்குவரத்து அட்டை உள்ளிட்ட சேவைகளை வழங்க பேடிஎம்-க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்.29 முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது,

வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளில் வைத்துள்ள தங்கள் பணத்தை இருப்பு உள்ள வரை திரும்ப பெற்றுக்கொள்ள இயலும் எனவும் ஆர்பிஐ தெளிவுப்படுத்தியுள்ளது. வங்கி சேவைகளை முற்றிலும் நிறுத்தவும் பணப் பரிவர்த்தனைகள் மட்டும் மேற்கொள்ளவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews