NEET தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம் பிப்ரவரியில் தொடக்கம் Online application for NEET examination starts in February
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
அதன்படி, 2024-25 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே 5-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வு, தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.
நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை அறிவிக்க உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.