INCOME TAX - போலி வாடகை ரசீதை ஃபைல் பண்றீங்களா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 23, 2024

Comments:0

INCOME TAX - போலி வாடகை ரசீதை ஃபைல் பண்றீங்களா?



INCOME TAX - போலி வாடகை ரசீதை ஃபைல் பண்றீங்களா?

நீங்கள் போலியான வாடகை ரசீதுகளை சமர்ப்பிக்கிறீர்களா? எச்சரிக்கையாக இருங்கள்..HRA டிடக்ஷனை நீங்கள் கிளைம் செய்கிறீர்கள் என்றால் நிறுவனத்திடம் இருந்து HRA கிடைத்தால் மட்டுமே உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது.

இல்லையெனில் ஹவுஸ் ரென்ட் அலவென்ஸில் உள்ள ஒரு விதி மூலமாக வருமான வரித்துறை உங்களுக்கு சிக்கல்களை கொடுக்கலாம். ஜனவரி மாதம் என்பது இந்தியாவில் உள்ள மாத சம்பளம் வாங்கக்கூடிய நபர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு மாதமாக கருதப்படுகிறது. இது நிறுவனங்கள் எம்பிளாயிகளிடமிருந்து முதலீட்டு ப்ரூஃப்களை கேட்கக்கூடிய மாதம். அவை LICகள், ELSS, பிற வரி சேமிப்பு திட்டங்கள் அல்லது வாடகை ரசீதுகள் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த டாக்குமென்ஸ்ட்களின் அடிப்படையில் நிறுவனம் உங்களது வரியை கணக்கிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு அதனை உங்கள் வருமானத்திலிருந்து பிடித்தம் செய்யும். இறுதியான டிடக்ஷன் வருமான வரி துறையினரால் செய்யப்பட்டு, பின்னர் உங்களுக்கு ரீஃபண்ட் கூட கிடைக்கலாம். இது மாதிரியான முதலீட்டு ப்ரூஃப்களை கொடுக்கும் பொழுது ஒரு சில நபர்கள் போலியான வாடகை ஒப்பந்தம் மற்றும் வாடகை ரசீதுகளை சமர்ப்பித்து வரிகளை சேமிப்பதற்கும் முயற்சி செய்கிறார்கள். ஒருவேளை நீங்களும் அவ்வாறு செய்வதற்கு யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் நிச்சயமாக வருமானவரித்துறையினரிடம் சிக்கி கொள்வீர்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

கடந்த பல வருடங்களாக பலர் இந்த வழியில் வரிகளை சேமித்து வருகின்றனர். வருமானவரித்துறை இதனை தற்போது கவனிக்க தொடங்கியுள்ளது. இது மாதிரியான சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை கண்டுபிடிக்க துவங்கியுள்ளது. போலியான வாடகை ரசீதுகளை சமர்ப்பித்து டிடக்ஷன்களை கிளைம் செய்யும் நபர்களுக்கு கடந்த ஆண்டு முதல் வருமான வரித்துறை நோட்டீஸ்களை அனுப்பி வருகிறது.

வாடகை ரசீது போலியானதா அல்லது உண்மையானதா என்பதை வருமானவரித்துறை எவ்வாறு கண்டுபிடிக்கிறது.?

- போலியான வாடகை ரசீதுகளை வருமானவரித்துறை ஆர்டிஃபீஷியல் இன்டலிஜென்ஸ் மூலமாக கண்டுபிடிக்கிறது.

- இதற்கு, AIS படிவம் மற்றும் படிவம்-26AS ஆகிய இரண்டும் படிவம்-16 உடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.

- PAN கார்டு சம்பந்தப்பட்ட ட்ரான்ஸ்ஷாக்ஷன் அனைத்தும் இந்த படிவங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். ஒரு வரி செலுத்துவோர் ஹவுஸ் ரெண்ட் அலவன்சில் வாடகை ரசீது மூலமாக கிளைம் செய்யும் பொழுது அவர்களது கிளைம் இந்த படிவங்களுடன் ஒத்துப் போகிறதா மற்றும் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கின்றதா என்பதை வருமானவரித்துறை கவனிக்கும்.

ஒரு எம்பிளாயி ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வாடகை செலுத்தினால் அவர் வீட்டு உரிமையாளரின் PAN நம்பரையும் வழங்க வேண்டும். இதனைக் கொண்டு உங்களது HRA இன் கீழ் கிளைம் செய்யப்பட்டுள்ள தொகை வீட்டு உரிமையாளரின் நம்பருக்கு அனுப்பப்பட்ட தொகையுடன் ஒத்து போகிறதா என்பதை வருமானவரித்துறை ஒப்பிட்டு பார்க்கும். இந்த இரண்டிற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கும் பக்கத்தில் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்.

ஒருவேளை உங்களது நிறுவனம் HRA வழங்கி மற்றும் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான தொகையை கிளைம் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் வீட்டு உரிமையாளரின் PAN-ஐ வழங்க வேண்டிய அவசியம் இல்லை. வருமானவரி துறையை தவிர்க்க வேண்டும் என்றால் கேஷ் ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை செய்யலாம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாடகை ரசீது மற்றும் வீட்டு உரிமையாளரின் PAN டிரான்ஸாக்ஷன்கள் ஆகிய இரண்டிலும் வித்தியாசங்கள் இருக்கும் பட்சத்தில் நீங்கள் கேஷ் ஆக செலுத்தி இருந்தாலும் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்வீர்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews