6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் +பயிற்றுநர்கள்! தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் நன்றி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 12, 2024

Comments:0

6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் +பயிற்றுநர்கள்! தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் நன்றி



Computer Lab + Instructors in 6992 Govt Middle Schools! Computer Teachers Association thanks Tamil Nadu Govt - 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் +பயிற்றுநர்கள்! தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் நன்றி

6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைத்து அதற்கான பயிற்றுநர்களையும் நியமிக்க உள்ள தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுத்திட்டமான பள்ளிக் கல்வித் துறையில் ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை சமச்சீர் கல்வியில் கணினி பாடத்தை அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 2011 ஆம் ஆண்டு கலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்கச் செய்தார். 2006 -2011ஆம் ஆண்டு 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, அதற்கான தனிப் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், கணினி அறிவியல் பாடத்தை கைவிட்டு, அறிவியல் புத்தகத்திலேயே கணினி அறிவியலுக்கு 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது வரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் விருப்ப பாடமாக உள்ளது.

பத்து ஆண்டுகள் போராடியும் பயனற்று போனது. 2016 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்கத்தில் போராட்டம் செய்த பொழுது மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "கணினி ஆசிரியர்களை போராட விடாதீர்கள்" அவர்களுக்கான பணி வாய்ப்பை வழங்குங்கள் என்று பத்திரிக்கை வாயிலாக அறிக்கை வெளியிட்டார்.

கடந்த மாதம் கணினி அறிவியல் பாடத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகத்துவ திட்டமான , ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே பணிநாடும் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு வைத்தோம். தற்போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் 6992 அரசு நடுநிலைப்பள்ளி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி ஆய்வகங்கள் அமைத்து அதற்கான கணினி பயிற்றுநர்களையும் நியமிப்பதாக உள்ளனர். தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்று 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பின் வாயிலாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகத்துவ திட்டமான , ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே பணிநாடும் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு வைத்தோம். தற்போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் 6992 அரசு நடுநிலைப்பள்ளி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி ஆய்வகங்கள் அமைத்து அதற்கான கணினி பயிற்றுநர்களையும் நியமிப்பதாக உள்ளனர். தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்று 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பின் வாயிலாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.

திரு வெ. குமரேசன் மாநில பொதுச் செயலாளர்,

தொடர்பு எண்: 8248922685,

9626545446.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்.655/2014.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews